
சிங் ஹாய்-திபெத் பீடபூமியின் மே திங்கள் வசந்த காலத்தில், உலகின் இதர இடங்களைப் போல, ஆண்டுதோறும் மே திங்களின் நடுப்பகுதியில் கொண்டாடப்படும் தாய் விழா, திபெத் இனத் தாயின் விழாவும் ஆகும். இந்நாளில் குழந்தைகள், தத்தம் தாய்க்கு நல்வாழ்த்து தெரிவிப்பர். மலர்ச்செண்டு வழங்குவர். 9 குழந்தைகளைக் கொண்ட திபெத் இன மகளிர் தெஜிங்செளக்கா 9 குழந்தைகளின் வாழ்த்தினைப் பெற்ற பின், ஆனந்தக் கடலில் மூழ்கிவிட்டார். அவர், திபெத்தின் லாசாவிலுள்ள, அனாதைக் குழந்தைகளைப் பராமலிக்கும் SOS கிராமத்தின் பணியாளர். இக்கிராமத்தின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, அவர்தம் பணியாகும். திருமணம் ஆக வில்லை என்ற போதிலும் தற்போது, அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.
1 2 3 4
|