
இந்தக் கிராமமானது, சர்வதேச SOS குழந்தைக் கிராம நிறுவனமும் சீன பொது துறை அமைச்சும் ஒத்துழைத்து உருவாக்கிய கிராமம் ஆகும். 4 ஆண்டுகளுக்கு முன், அனாதைகளைச் சேர்க்கத் துவங்கி, இது வரை, திபெத்தின் பல்வேறு இடத்து 156 அனாதைகள் இக்கிராமத்தில் வாழ்கின்றனர். சாதாரண குடும்பத்துக் குழந்தை போலவே, அவர்கள், பெரியவர்களின் அன்பும் நேசிப்பும் பெறுகின்றனர். கல்வி பயில்கின்றனர். இக்கிராமத்தின் தலைவர் டார்வர் கூறியதாவது:

"தற்போது, இக்கிராமத்தில் 50 குழந்தைகள் துவக்கப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். பள்ளிக்கு செல்லும் வயதடையாத குழந்தைகள், இங்குள்ள குழந்தை காப்பகத்தில் கல்வி பெறுகின்றனர். தலிர, குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப, பள்ளிக் கல்வி தவிர்ந்த நேரத்தில், கலை மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1 2 3 4
|