
குடும்பத்தினரின் அன்பு போன்ற நல்லுணர்வை அனுபவிக்கச் செய்திட, அங்குள்ள 150 குழந்தைகள், 17 குடும்பங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு தாய் உண்டு. அவர்கள், இளமையாக இருந்தாலும், குழந்தைகளுக்கு அன்பு காட்டி, கவனமாகப் பராமரிக்கின்றனர். அவர்களில் தெஜிங்செளக்கா ஒருவராவார்!
அவரும் 9 குழந்தைகளும், கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் வசிக்கின்றனர். குழந்தைகள் வீட்டைச் சுத்தம் செய்கின்றனர். கண்ணாடிகளைத் துடைக்கின்றனர். போர்வையை வெயிலில் காய வைக்கின்றனர். எமது செய்திமுகவர், இவ்வீடு சென்றதும் இதெல்லாவற்றையும் கண்டுள்ளார். அறையில் அமருமாறு தெஜிங்செளக்கா, செய்திமுகவரை வரவழைத்தார். தாம் எவ்வாறு தாயாக இருப்பதை அவர் எடுத்துக்கூறினார்.
1 2 3 4
|