 அது புகழ்பெற்ற ஏரி. அதன் கரையை ஒட்டி அமைந்துள்ள நகரில் நான் வசித்து வருகிறேன்.
ஆனாலும், எப்போதாவது தான் அந்த ஏரிக்குப் போவேன்.
மக்கள் நெரிசல், இரைச்சல், இந்த இரண்டுமே எனக்குப் பிடிக்காது.
எப்போதாவது மாலைப் பொழுதில் அங்குப் போவேன். கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவேன்.
ஒரு நாள், அந்த ஏரிக்கரைக்குப் போனேன்.
நேற்றிரவு ஆறு மணி நேரம் நல்ல மழை. இன்று இல்லை.
பொழுது போய், இருள் வரத் தொடங்கியது. சிந்தனையில், வழக்கம் போல், மூழ்கிவிட்டேன்.
1 2 3 4
|