அப்போது—
திடீரென்று சலசல என்ற சத்தம் கேட்டது. நாணல் புதருக்கு அப்பால், சிறிய உருவம் தென்பட்டது. சரியாகத் தெரியவில்லை.
"யார் அங்கே?" என்று உரக்க கத்தினேன். பதில் இல்லை.
பொதுவாக, இந்தப் பகுதி அமைதியான இடம். இருள் பரவத் தொடங்கி விட்டது. எனக்கும் சற்று பயம் தோன்றியது.
"யார் அது?" என்று மறுபடியும் கேட்டேன். பதில் இல்லை. வீட்டுக்குப் போகலாம் என எண்ணி, எழுந்தேன்.
அப்போது—
"நான் தான். சிறுவன் ஷுன்... இங்கே மீன் பிடிக்கிறேன்" என்று, பலவீனமான குரலில் பதில் வந்தது.
12 வயது சிறுவன் குரல் போல் எனக்குத் தோன்றியது.
"இருட்டில் எப்படி மீன் பிடிக்க முடியும்? உன் கண்ணுக்கு மீன் தெரியுமா?" என்று கேட்டேன். இதற்குப் பதில் வரவில்லை.
"நீ எங்கே வசிக்கிறாய்?" என்று கேட்டேன்.
"குதிரை தலை தெரு" என்றான்.
1 2 3 4
|