இந்தக் குரல் எனக்குப் பழக்கப்பட்ட குரல் போல் தோன்றியது.
"இல்லை, இல்லை. சமாதான தெருவில் நான் வசிக்கிறேன்" என்றான்.
இப்போது எனக்கு, நினைவுக்கு வந்தது.
"ஓ! சென் என்பாரின் மகன்தானே நீ? உன் அப்பா கருமான் வேலை பார்ப்பவர்தானே?" என்றேன்.
இதைக் கேட்டு, அவன் என்னை நோக்கி ஓடி வந்தான்.
"ஆமாம். அது சரி. நீங்கள் யார்?" என்று என்னைர் பார்த்துக் கேட்டான்.
அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன்.
ஆறு வயதில் பார்த்த போது, முகம் அழகாக இருந்தது. இப்போது, கறுத்துப் போய் காணப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஊருக்கு வந்தேன். இந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்த போது, குடும்பம் வேறு எங்கோ போய் விட்டதாகக் கூறினர்.
ஏரிக்கரையில், அவனைச் சந்தித்த போது, வியப்பு ஏற்பட்டது.
அவனை, என் அருகில் உட்காரச் செய்தேன்.
1 2 3 4
|