இந்தக் கூட்டு நிறுவனம் அங்கு ஒரு முதுகெலும்பு நிறுவனமாகவும் மாறியுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தின் பரப்பளவு 1.2 சுதுர கிலோமீட்டராகும். சுமார் நூறு மீட்டர் நீளமுடைய உற்பத்தி நெறியின் ஒரு முனையில், மோட்டார் சைகிளின் சட்டம், எஞ்சின் உள்ளிட்ட சில பகுதிகள், காணப்படுகின்றன. உற்பத்தி நெறியின் இரு பக்கங்களிலுள்ள தொழிலாளர்களால் அவை பொருத்தப்பட்ட பின், மறு முனையிலவ் ஒரு மோட்டார் சைகிள் உற்பத்தியாகின்றது.
இங்கு உற்பத்தியாகும் ஒவ்வொரு மோட்டார் சைகிளும், கண்டிப்பான முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. தரம் குறைவான மோட்டார் சைகிள் உற்பத்தி களரியிலிருந்து வெளியேற முடியாது. பரிசோதனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மோட்டார் சைகிள்கள் சோதனை முறையில் ஓட்டிப் பார்க்கப்பட வேண்டும். வேகத்தை அதிகரிப்பது, திடீரென நிறுத்துவது, திடீரென்று திருப்புவது முதலிய செயல்பாட்டில் அவை ஈடுபட வேண்டும். தரமானவை என உறுதிப்படுத்தப்பட்ட மோட்டார் சைகிள்கள் தான், சந்தை விற்பனைக்கு வர முடியும் என்று இந்தக் கூட்டு நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூறினார்.
1 2 3 4 5
|