கண்டிப்பான தரக் கட்டுப்பாட்டினால், சிறந்த தரமுடைய உற்பத்தி பொருள் தோன்றியுள்ளது. மெகட் மோட்டார் சைகிள் சீனாவில் 2 லட்சத்து பத்தாயிரம் கிலோமீட்டார் தூரம் ஓடிய பின் கூட, பெருமளவில் பழுதுபார்க்கப்படத் தேவை இல்லை என்று சாதனையை உருவாக்கியுள்ளது.
தரத்துக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில், பிந்திய சேவை இப்போது தேவைப்படுகிறது. தேவை செய்வதே, தன் நோக்கம் என்று மெகட் கூட்டு நிறுவனம் தெரிவிக்கின்றது. அது முழு நாட்டிலும் ஆயிரத்து 400க்கும் அதிகமாந விற்பனை நிலையங்களை நிறுவியுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான விற்பனைக்கு பிந்திய சேவை மையங்களையும் நிறுவியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மெகட் கூட்டு நிறுவனத்தின் பணியாளர்கள் உள்நாட்டு தேவையில் ஊன்றி நிற்கும் அடிப்படையில், சர்வதேச சநந்தையிலும் பார்வை செலுத்தியுள்ளனர். தென் கிழக்காசியாவில், சீனாவின் மோட்டார் சைகிள்கள், சிறந்த தரம் குறைவான விலை என்ற மேம்பாட்டைக் கொண்டு, சந்தையை விரைவாக கைப்பற்றியுள்ளன. கம்போடியாவில் 60 லட்சம் யுவானுக்கு அதிகமாக முதலீடு செய்து, மோட்டார் சைகிள்களைப் பொருத்தம் தொழிற்சாலை ஒன்றை அது கட்டியமைத்துள்ளது.
1 2 3 4 5
|