
தெஜிங்செளக்காவின் அறையின் சுவரில், குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் நிறைய காணப்படுகின்றன. ஓவியங்களில் சிறிய மனிதர், சிறிய மலர், சிறிய வீடு ஆகியவை, சீராக இல்லை என்ற போதிலும், ஒவ்வொரு ஓவியத்திலும் "தாயின் பிறந்த நாள் மகிழ்ச்சி" என்ற எழுத்துகள், தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அவரது பிறந்த நாளன்று, காலையில், அனைத்துக் குழந்தைகளும் அன்பளிப்புப் பொருளை தயாரித்துக் கொடுத்தனர். மிக இளம் குழந்தையும், என்னிடம் வந்து "தாய், பிறந்த நாள் சாசிதெலே" என்று கூறி வாழ்த்தினார். இவ்வாறு கூறிய போது, தெஜிங்செளக்காவின் கண்களில் நீர் வழிந்தது.
1 2 3 4
|