
இளந்தாயின் மீதான குழந்தைகளின் அன்பு, எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த, வீட்டிலுள்ள குழந்தைகள் அனைவரையும் வரவழைத்து, இன்று என்ன நாள் என செய்திமுகவர் கேட்டார். "இன்று தாய் விழா" என்று அனைவரும் ஒருமித்த குரலில் பதிலளித்தனர்.
தமது அன்புமிக்க தாய் தெஜிங்செளக்காவுக்கு அன்பளிப்பாகத் தரும் வகையில் தாம் பாடிய சில பாடல்களை ஒலிப்பதிவு செய்யுமாறு, குழந்தைகள் கோரினர்.

மழலை மொழியில் பாடிய பாட்டொலி கேட்டு செய்திமுகவர் நெகிழ்ந்து போனார். ஒரு இளம் தாய், 9 அனாதைக் குழந்தைகளுடன் ஒன்றாக வாழந்து, அவர்களை வளர்த்து, அன்பையும் ஆற்றலையும் அவர்களுக்கு அர்ப்பணித்தார். இதிலிருந்து தாயின் அன்பு மகத்தானது என்று தெரிகின்றது. இத்தகைய அன்புக்கு, குழந்தைகளின் கைம்மாறு, ஈடு இணையற்றது என்று செய்திமுகவர் தெரிவித்தார். 1 2 3 4
|