
அலேதாய்
சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வடக்கிலுள்ள அலேதாய் பிரதேசத்தில், ஒரு கதை வழங்கி வருகின்றது. ஆயர் ஒருவர், மலையோரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கையில், கவனமின்மையினால், கல் மீது கால் மோதி தரையில் வீழும் அளவுக்குச் சென்றார். கோபமடைந்த அவர், இக்கல்லை, காலால் உதைத்தார். எதிர்பாராதவாறு அதிலிருந்து தங்கக் கல் வெளியே வந்தது. ஆயர் பணக்காரன் ஆனார்.

இக்கதை தவிர, "அலேதாயின் 72 மலையோரத்தில் ஒவ்வொன்றிலும் தங்கம் உண்டு" என்ற பழமொழியும் பரவுகின்றது. இங்குள்ள தங்கத் தாது எவ்வளவு செழிப்பானது என்று நினைத்துப்பார்க்கலாம். உண்மையில் நிலப்பரப்பு விரிவான சிங்கியாங்கில் தங்கத்தாது தவிர, எண்ணெய், இயற்கை வாயு, நிலக்கரி, காற்று ஆற்றல், சூரிய ஒளி ஆற்றல் முதலியவற்றின் படிவும் சீனாவில் முதலிடம் வகிக்கின்றது.
1 2 3 4
|