
ஏராளமான தாதுப்பொருட்கள் தவிர, சிங்கியாங்கில், ஒளி வெப்பம், காற்று ஆற்றல் ஆகியவையும் அதிகம். ஐரோப்பிய-ஆசிய கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளதால், சிங்கியாங்கில், இரவுக்கும் பகலுக்குமிடையிலான தப்பவெப்ப நிலை இடைவெளி அதிகம்; வறட்சி, அதிக சூரிய ஒளி என்ற காலநிலை, சிங்கியாங்கிற்கு அதிகமான சூரிய ஒளி ஆற்றல், காற்று ஆற்றல் வளத்தைக் கொண்டு வந்துள்ளது.

சிங்கியாங்கின் புதிய எரி ஆற்றல் ஆய்வகத்தின் தலைவர் லேய் செள கிங் பேசுகையில், கடந்த பல்லாண்டுகளில், புதிய எரியாற்றலின் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சிங்கியாங் ஈடுபட்டு வருகின்றது. சூரிய ஆற்றலின் பயன்பாடு, விரைவாக அதிகரித்து வருகின்றது என்று கூறினார்.
1 2 3 4
|