
டாபாங் நகர காற்று மின் நிலையம், சீனாவின் முதலாவது காற்று ஆற்றல் மின் பிறப்பு நிலையம். கடந்த பத்து ஆண்டுகால வளர்ச்சியினால், தற்போது இவ்வாலையில் 100க்கும் அதிகமான காற்று ஆற்றல் மின்னாக்கிகள் உள்ளன. கிட்டத்தட்ட 70 ஆயிரம் கிலோவாட்மணி மின்சாரத்தை அவற்றால் பிறப்பிக்கின்றன என்று, சிங்கியாங் காற்று ஆற்றல் கூட்டு நிறுவனத்தின் தலைமை மேலாளர் வாங் லீ மின் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"காற்று ஆற்றலானது, சுத்தமான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வல்லிமை உடைய ஆற்றலாகும். சிங்கியாங்கில் காற்று ஆற்றலால் உற்பத்தியாகும் மின்சார அளவு, நாடு முழுவதிலுள்ள மின்சார அளவில் ஐந்தில் ஒரு பகுதியாகும். காற்று ஆற்றல் மின்னாக்கி பற்றிய சீனாவின் ஆய்வு மேலும் ஆழமாவதுடன், சிங்கியாங்கில் காற்று ஆற்றலின் பயன்பாடு மேலும் விரிவடையும்" என்றார், அவர்.
1 2 3 4
|