
16 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய சிங்கியாங், அதன் செழிப்பான தாது மூலவளம், நீர் மண் ஒளி வெப்ப மூலவளம், பலத்தரப்பட்ட சுற்றுலா மூலவளம் ஆகியவற்றால், உலகின் வேவ்வேறான இடத்து நண்பர்களை ஈர்த்துள்ளது. இன்று வெளிநாட்டுத் திறப்புப் பணி மூலம், உலகில் 190 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் பொருளாதார வர்த்தக உறவை நிறுவியுள்ளது. குறுக்கும் நெடுக்குமாய் செல்லக்கூடிய போக்குவரத்து வலைப்பின்னல், நீர் சேமிப்பு, எரி ஆற்றல், மற்றும் தொலைத்தொடர்பு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டமை ஆகியவற்றினால், சிங்கியாங்கின் அடிப்படை வசதிகள் பெரிதும் மேம்பட்டுள்ளன. தன்னாட்சிப்பிரதேச அரசின் துணைத் தலைவர் வாங் கிம் ஸியேங், சிங்கியாங்கின் முதலீட்டுச்சூழல் குறித்து கூறியதாவது:

"அரசு அனுமதியுடன், நடைமுறைக்கு வரக்கூடிய முன்னூரிமையுடைய கொள்கைகள் அனைத்தும் சிங்கியாங்கில் செயல்படுத்தப்படும். முதலீட்டாளரின் பாதுகாப்புக்கான சிறந்த நிலைமையை நாங்கள் உருவாக்கித்தர வேண்டும் " என்றார் அவர். 1 2 3 4
|