

செழிப்பான மூலவளத்தைப் பொருளாதார மேம்பாடாக்குவது என்பது சிங்கியாங்கின் பல்வேறு இன மக்கள் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் திட்டப்பணி ஆகும். 4 ஆண்டுகளுக்கு முன், "மேற்கிலிருந்து கிழக்கிற்கு இயற்கை வாயுவை அனுப்புவதென்ற திட்டப்பணி" சிங்கியாங்கில் துவங்கியுள்ளது.

4200 கிலோமீட்டர் நீளமான இயற்கை வாயு ஊடனுப்ப குழாய் மூலம், சிங்கியாங்கின் இயற்கை வாயு, தாலிமும் வடிநிலத்திலிருந்து துவங்கி, மேற்கு, மத்திய, மற்றும் கிழக்கு சீனாவின் 9 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்களின் ஊடாக, பொருளாதார வளர்ச்சியடைந்துள்ள கிழக்கு நகரான ஷாங்காய் மற்றும் முழு யாங் சி ஆற்று முகத்துவாரப் பிரதேசத்துக்கு அனுப்பப்படும். இத்திட்டப்பணியின் மூலம், ஆண்டுக்கு சிங்கியாங்கிற்கு 100 கோடி யுவான் வருமானம் கிடைக்கும்.
1 2 3 4
|