சீனாவின் விசாலமான மேற்கு பகுதியில், இயற்கை மூலவளம் மிகவும் அதிகம். 2000ஆம் ஆண்டில், மேற்கு பகுதியின் வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த மேற்கு பகுதி, இப்போது விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது. 2003ஆம் ஆண்டு ஜுன் திங்களில் துவங்கிய "மேற்கு பகுதி திட்டம்" எனும் தொண்டுப்பணி நடவடிக்கையால், சீனர்கள் மேற்கு பகுதி மீது அதிக அளவு கவனம் செலுத்துகின்றனர். பல்கலைகழகங்களின் பட்டதாரி மாணவர்கள், தொண்டர்களாக மாறி, மேற்கு பகுதியின் வளர்ச்சியில் ஈடுபடுவதற்கும் இது துணை புரிகிறது. இத்தகைய தொண்டர்களில் ஒருவர் தான் திரு Huang Xiao.
2003ஆம் ஆண்டின் ஜுலை திங்களில், Hunan வேளாண் பல்கலைக்கழகத்தின் உயிரின பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். கிழக்கு சீனாவின் Shan Dong மாநிலத்தின் Ji Nan நகரிலுள்ள ஒரு உயிரின தொழில் நுட்பக் கூட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பை அவர் கைவிட்டு, "மேற்கு பகுதி திட்டம்" எனும் தொண்டுப்பணி நடவடிக்கையில் ஈடுபட்டார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தாம் வாழ்ந்து, கல்வி கற்ற Chang Sha நகரிலிருந்து அவர் வெளியேறினார்.
அவர் தனது வீட்டை விட்டு வெளியேறியது இதுவே முதன்முறை. அவரின் தாயார் அவருக்காக மிகவும் கவலைப்பட்டார். பல்கலைக்கழகத்தில் தாம் பெற்ற அறிவைப் பயன்படுத்தி, வறுமைப்பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சேவை செய்ய Huang Xiao விரும்புகின்றார். அவர் கூறியதாவது:
"அப்போது, இங்கு நான் வந்ததற்கு என் தாயார் எதிர்ப்பை தெரிவித்தார். மிகவும் சாதாரணமாகத் தான், இங்கு நான் வந்தேன். மேற்குப் பகுதியின் வளர்ச்சிக்குச் சேவை புரிந்து, இங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மாற்றுவதற்கு கூடிய மட்டும் முயற்சி செய்கிறேன்." என்றார் அவர்.
1 2 3 4
|