
2004ஆம் ஆண்டின் மார்ச் திங்களில், Huang Xiao தொண்டராக வேலை செய்யும் Qing Shan வட்டத்தின் Da Lin கிராமத்தில் இப்பள்ளி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. ஒவ்வொரு புதன்கிழமை இரவிலும், பாடம் நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு பாடம் கற்பிக்க, ஒரு மணி நேரம் Huang Xiao நடந்து செல்ல வேண்டும்.
துவக்கத்தில், பள்ளியில் சில மாணவர்களே இருந்தனர் என்று Huang Xiao கூறினார். அவர் கூறியதாவது:

"துவக்கத்தில் அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொழில் நுட்பங்கள் பற்றிய விடியோ படங்களைப் பார்ப்பதன் மூலம், வேளாண்த்துறையில் அடிக்கடி ஏற்படும் சில பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு, நிறைய மக்கள் இப்பள்ளிக்கு வந்துள்ளனர்." என்றார், அவர்.
உள்ளூர் பிரதேசத்தின் நிலைமைக்கிணங்க, விவசாயிகளுக்கு உருப்படியான வேளாண் தொழில் நுட்ப அறிவை Huang Xiaoவும் அவருடைய நண்பர்களும் விளக்கி கூறுகின்றனர். இது மட்டுமல்ல, அதிகப் பொருளாதார மதிப்புடைய வேளாண் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதையும், கால் நடை வளர்ப்பை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கின்றனர்.
1 2 3 4
|