• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-14 21:43:51    
மேற்குப் பகுதியின் வளர்ச்சிக்கு வேலை செய்யும் தொண்டர்கள்

cri

Huang Xiao போல், சீனாவின் மேற்குப் பகுதியில் தொண்டுப்பணி புரியும் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாகும். பொதுவாக, ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளாக அவர்கள் சேவை புரிகின்றனர். இனி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த, ஆண்டுதோறும், பல்லாயிரக்கணக்கான பட்டதாரி மாணவர்கள் தொண்டர்களாக மேற்குப்பகுதியில் சேவை புரிவதற்கு சீனாவின் தொடர்புடைய வாரியம் ஏற்பாடு செய்யும்.

தொண்டராக Huang Xiao வேலை செய்யும் இடத்தில், மனித நடமாட்டம் குறைவு. போக்குவரத்து வசதி இல்லை. பொருளாதாரம் மிகவும் பின்தங்கியது. இப்பிரதேசத்தின் வறுமை நிலைமையைக் கண்டு, பலவற்றை Huang Xiao நினைக்கின்றார். அவர் கூறியதாவது:

"அவர்களுக்கு சேவை புரிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் வாழ்க்கை மிகவும் வளமானதாக இல்லை என்ற போதிலும், பொருட்களை வாங்குவதற்கான பணம் எங்களுக்கு கிடைக்கிறது. அவர்களுக்கோ சாப்பாட்டுக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது. தங்களது குழந்தைகள் கல்வி கற்பதற்கு அவர்களால் ஆதரவளிக்க முடியவில்லை." என்றார் அவர்.

இங்குள்ள மக்கள், சோளம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த பயிர்களின் பொருளாதார மதிப்பு குறைவு. இப்பயிர்களைப் பயிரிடுவதால், விவசாயிகள் குறைவான பணம் சம்பாதிக்கின்றனர். நியாயமற்ற வேளாண்மை கட்டமைப்பு, உள்ளூர் பிரதேசத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு இடையூறாகும். தவிர, இப்பகுதியில் கல்வியறிவும் தகவல் தொடர்பும் குறைவு. இந்த நிலையை மாற்ற உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழிமுறையை அறியவில்லை. இதனால் விவசாயிகளுக்கான இரவு பள்ளியை Huang Xiaoஉம் அவரின் கூட்டாளிகளும் நிறுவியுள்ளனர். பள்ளியில், விவசாயிகளுடன் அவர்கள் நேரில் தொடர்பு கொண்டு, விவசாயிகளின் இன்னல்களைத் தீர்ப்பதற்குத் துணை புரிகின்றனர்.

1  2  3  4