 தற்போது, மிகவும் வெப்பமான கோடைகாலமாகும். ஆனால், சீனாவின் பல்வேறு ஹோட்டல்களில், ஏர் கண்டிஷனரின் தாழ்ந்த தட்பவெப்ப நிலை 26 திகிரி செல்சியஸுக்கு மேல் மாற்றப்பட்டது. அலுவலகக் கட்டடங்களில், எரியாற்றலைக் குறைக்க, கணிணி, அச்சிடும் இயந்திரம், பிரதி எடுக்கும் இயந்திரம் ஆகியவை தூங்கும் நிலையில் வைக்கப்படுகின்றது. லிப்டை அடிக்கடி பயன்படுத்துவதற்கு அதிக மின்னாற்றல் தேவை. ஆகையால், மக்கள் தங்களாகவே மாடிப்படியில் ஏறுகின்றனர். சிக்கனப்படுத்துவது சீன சமூகத்தில் நடைமுறை வழக்கமாகிவிட்டது.

சீனாவில் பலருக்கு தேனீர் குடிக்கும் வழக்கம் உண்டு. பல்வேறு பணியகங்களில் தேனீருக்கு வெப்ப நீர் விநியோகிக்கப்படுகின்றது. முன்பு, வெப்ப நீரை வீணாக்கும் நிலைமை அதிகமாக பரவியிருந்தது. ஆனால் தற்போது, தேவைப்படும் அளவுக்கு மட்டுமே மக்கள் கொதிக்க வைக்கப்பட்ட வென்னீரை எடுக்கின்றனர். சென் சியாங் என்பவர் தென்மேற்கு பெய்ஜிங்கில் சாங் கு வட்டத்தின் ஓர் அரசுத் துறை பணியாளர். நாள்தோறும் அலுவலகம் வந்தடைந்தவுடனே, பணியகத்தைச் சுத்தம் செய்து கொதிட நீரை புட்டியிலடைகின்றார். தமது பணியகத்தில் பணியாளர்கள் அதிகமில்லை. ஆகையால், நாள்தோறும் புட்டியில் அரை அளவு அடைக்கின்றார். அவர் கூறியதாவது,
ஏன் அரை அளவு மட்டும் புட்டியிலடைக்கின்றேன்? முன்பு, நாள்தோறும் அரை பகுதி நீர் புட்டியில் மிஞ்சியிருந்தது. அடுத்த நாள் அதை வீணாக்க வேண்டியிருந்தது. இது சரியில்லை என்றார் அவர்.
1 2 3 4
|