• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-12 19:26:52    
சீன மக்களின் சிக்கன முறை

cri

யுவானின் மகள் துவக்கப் பள்ளியில் பயில்கின்றாள். சொந்தமாக அமைந்த இணையத்தளத்தில் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகளை அவள் பிரச்சாரம் செய்கின்றாள். இதுவரை, அவள் 300க்கும் அதிகமான கருத்துக்களை விநியோகித்துள்ளாள்.

அரசு வாரியங்கள் எரியாற்றல் விலை சரிப்படுத்துவதன் மூலம், நகரவாசிகளிடையே சிக்கனப்படுத்தும் பழக்கங்களை தூண்டுகின்றது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள ஈன் சுவான் நகரில், திங்களுக்கு மேலும் அதிகமான நீரை பயன்படுத்துவோர் மேலும் அதிகமான விலை தர வேண்டும். இவ்வாண்டின் முதல் 6 திங்களில், இந்நகரின் வெப்பநிலை கடந்த ஆண்டு இதே காலத்தை விட அதிகமானது. நகர மக்கள் தொகை 20 ஆயிரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 12 இலட்சம் டன் நீர் சிக்கனப்படுத்தப்பட்டது.

எரியாற்றலைச் சிக்கனப்படுத்த, கட்டிட வாரியங்களும் புதிய கட்டிட பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில், வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள துறைமுக நகரான சின் குவான் தௌ நகரில், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் பொருள் மூலம் கட்டப்பட்ட சில விடுதிகள் தோன்றியுள்ளன. சாதாரண விடுதிகளுடன் ஒப்பிடும் போது, அவற்றின் தோற்றம் மாறவில்லை. ஆனால், 70 விழுக்காடு எரியாற்றலைச் சிக்கனப்படுத்தலாம். நகரவாசி லீ சியௌ லுங் கூறியதாவது,

குளிர்காலத்தில் வெப்ப வசதி குறைவாக பயன்படுத்தினால் குளிர் உணரவில்லை. கோடைக்காலத்தில் மேற்கு சுவர் அவ்வளவு வெப்பமாக இல்லை என்றார் அவர்.

தற்போது, சின் குவான் தௌ நகரின் புதிய நகர் திட்டத்தின் படி, இனி துவங்கவுள்ள சிவில் கட்டிடங்களில் புதிய கட்டிட பொருள், புதிய தொழில் நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தப்பட வேண்டும். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் அளவு 50 விழுக்காட்டு மேல் இருக்க வேண்டும்.


1  2  3  4