
முன்பு, விளக்கு ஒளி நகரங்களுக்கு அழகான இரவு காட்சியைத் தந்தது. ஆனால், இவ்வாறு செய்தால், அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. மின் சாரத்தைச் சிக்கனப்படுத்தும் வகையில், இவ்வாண்டு பெய்ஜிங்கின் 300 சாலைகளில் பயன்படுத்தும் விளக்குகள் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டன. நகரில் பல்வேறு கட்டடங்களின் அலங்கார விளக்குகள், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பெய்ஜிங் நகராட்சி நிர்வாக ஆணையத்தின் இரவு விளக்கு காட்சி பிரிவின் பொறுப்பாளர் சியா சியேன் பிங் கூறியதாவது,
பெய்ஜிங்கின் விளக்கு ஒளி காட்சி துறையில், முன்பு இருந்தது மேலும் பிரகாசமாக இருந்தால் மேலும் சிறப்பானது என்பதிலிருந்து, மின்சாரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதாக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக, முன்பு யுயே தன் பாலத்தில் காட்சி விளக்குகளுக்கு சுமார் 200 கிலோவாட் மின்சாரம் தேவைப்பட்டது. புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திய பிறகு, 100 கிலோவாட்டுக்குக் குறைவான மின்சாரம் போதும் என்றார் அவர்.
பல நகரவாசிகளுக்கு எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் கருத்துக்கள் உண்டு. பெய்ஜிங்கின் துங் சென் பிரிவில் வாழும் யுவான் சின் கூறியதாவது,
எர் கண்டிஷின்னர் அரை மணி பயன்படுத்தப்பட்ட பின், அறையில் வெப்பநிலை குறைந்துள்ளது. அடனே அதை நிறுத்திவிட்டு, மின்சார விசிறியை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால், நாள்தோறும் குறைந்தது 4 கிலோவாட் மின்சாரம் சிக்கனப்படுத்தலாம் என்றார் அவர்.
1 2 3 4
|