• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-12 19:26:52    
சீன மக்களின் சிக்கன முறை

cri

தேவைக்கு ஏற்ப நீரைப் பயன்படுத்துவது, ஒரு தாளின் இரு பக்கங்களில் எழுதுவது, பணியகத்துக்கு வருவதற்கு அல்லது வீட்டுக்கு திரும்புவதற்கு தனி காருக்குப் பதிலாக பேரூந்தில் பயணம் செய்வது முதலியவை சாங் கு வட்டத்தில் சிக்கனப்படுத்தும் முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன. இத்தகைய செய்லால், ஒரு திங்களில் மட்டும் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட சுமார் 50 ஆயிரம் யுவான் செலவு குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் காட்டுகின்றது.

சீனாவில், மூலவளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் மக்கள் மேன்மேலும் கவனம் செலுத்துகின்றனர். பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஒரு பணியகக் கட்டிடத்தில், தாழ்வாரத்தில் உள்ள 3 விளக்குகளில் ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. போதிய இயற்கை சூரிய ஒளி கிடைக்கும் அறையில், பகலில் மக்கள் விளக்குகளைப் பயன்படுத்துவதில்லை. இந்தக் கட்டிடத்தில், விளக்குகளுக்கான மின்சார பயன்பாட்டு அளவு, கடந்த ஆண்டு இதே காலத்தை விட 60 விழுக்காடு அதாவது 500 கிலோவாட் மணி என்ற அளவில் சிக்கனப்படுத்தப்பட்டது.

மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துவதால் பணிக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று இங்கே பணி புரியும் வாங் ஹுய் கூறினார்.

இந்நடவடிக்கை மேற்கொண்ட துவக்கத்தில், ஒளி அளவு முன்பு போல் வீசவில்லை என்று உணர்ந்தேன். ஆனால், இதனால் பணிக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. குறைவான விளக்குகளைப் பயன்படுத்தினால் குளிராக இருக்கின்றது என்றார் அவர்.

பல வழிமுறைகளின் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம். ஷாங்காய் மாநகரத்தின் லு வான் பகுதி அரசு பணியகத்தில் பாரம்பரிய ஏர் கண்டிஷனர்கள் மாற்றியமைக்கப்பட்டன. தற்போது அவை எரி வாயுவை பயன்படுத்துகின்றன. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் போது சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்கலாம்.

1  2  3  4