• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-17 10:12:24    
சின் ஜியாங்கில் எரியாற்றல் தொழிலின் வளர்ச்சி

cri

சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், சீனாவிலேயே மிக பெரிய நிலப்பரப்பு உள்ள பகுதியாகும். அங்கு எண்ணெய், இயற்கை வாயு, நிலக்கரி ஆகிய மூலவளங்களின் படிவுகள் ஏராளமாக உள்ளன. பல ஆண்டுகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் மூலம், எரியாற்றல் தொழில் சின் ஜியாங் பொருளாதாரத்தின் தூணாக மாறிவிட்டது. பொருளாதாரத்தை மேலும் வளர்க்க, தற்போது, மூலவளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சின் ஜியாங்கிலுள்ள எண்ணெய் படிவுகளின் அளவு 2000 கோடி டன்னைத் தாண்டி விட்டது என்று அரசு மதிப்பீடு தெரிவிக்கிறது. அங்குள்ள இயற்கை வாயுவின் படிவு அளவு 11 லட்சம் கோடி கன மீட்டரை நெருங்கியுள்ளது. அங்கு கண்டறியப்பட்ட நிலக்கரி படிவுகளின் அளவு, சீனாவில் உள்ள நிலக்கரியின் மொத்த படிவுகளில் 40 விழுக்காடு ஆகும். மூலவள வளர்ச்சியில் சின் ஜியாங்கிற்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சின் ஜியாங் எரியாற்றல் வளர்ச்சி செய்யத் தொடங்கி, இத்தோடு சுமார் 100 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், கடந்த பல பத்து ஆண்டுகளில் தான், சின் ஜியாங்கின் எரியாற்றல் தொழில் உண்மையாக விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. அந்த காலத்தில், சின் ஜியாங் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த, அங்கு எண்ணெய், இயற்கை வாயு உள்ளிட்ட மூலவளங்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான முதலீட்டை சீன அரசு அதிகரித்துள்ளது. பல பெரிய எண்ணெய் வயல்கள், எண்ணெய் தளங்கள் மற்றும் வேதியியல் தொழில் தளங்கள் சின் ஜியாங்கில் தொடர்ச்சியாக நிறுவப்பட்டுள்ளன. 1990ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை மட்டும், எரியாற்றல் வளர்ச்சி மற்றும் கட்டுமானத்துக்கு சீன அரசு மொத்தமாக 12 ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது.

1  2  3  4