எரியாற்றல் வளர்ச்சியால், சின் ஜியாங்கின் நகரமயமாக்கமும் விரைவடந்துள்ளது. பல நகரங்கள் அடுத்தடுத்து நிறுவப்பட்டன. சின் ஜியாங்கின் வட பகுதியிலுள்ள Kelamayi நகரம், நவ சீனா நிறுவப்பட்ட பின் வளர்க்கப்பட்ட முதலாவது பெரிய எண்ணெய் வயலான Kelamayi எண்ணெய் வயலுக்கு புகழ் பெற்றது. 50 ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், Kelamayi எண்ணெய் வயல் மேற்கு சீனாவில் மிகப் பெரிய எண்ணெய் வயலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, இந்த எண்ணெய் வயலில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு ஒரு கோடி டன்னைத் தாண்டியுள்ளது. Kelamayi நகரத்தின் துணை மேயர் சௌ வூ ஷெங் செய்தியாளரிடம் கூறியதாவது—
"எண்ணெய் தொழில், வேதியியல் தொழில் மற்றும் இவ்விரு தொழிலின் துணை தொழில்களை வழிகாட்டியாக கொண்டு வளர்ச்சி காண்பது, Kelamayi நகரின் தொழில் வளர்ச்சி திட்டமாகும். எண்ணெய் தொழில் இந்நகரின் வளர்ச்சியை தூண்டுகிறது. எங்கள் மிக முக்கிய மூலவளம் எண்ணெய்தான். கடந்த ஆண்டு, எங்கள் உள் நாட்டு மொத்த உற்பத்தி 2960 கோடி யுவான் ஆகும். எண்ணெய் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிலின் உற்பத்தி மதிப்பு இதில் சுமார் 86 விழுக்காடாகும். கோபி பாலைவனத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியால், இந்நகரின் தோற்றம் மேம்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பசுமையாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர வளர்ச்சி ஆகியவை பெரும் வளர்ச்சி கண்டுள்ளன" என்றார் அவர்.
இந்த நகரில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எண்ணெய் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள 30 லட்சத்துக்கு அதிகமான மக்களின் வேலைகள் எண்ணெயுடன் தொடர்புடையவை. Maimaitile abula ஒரு எண்ணெய் தொழிலாளர். கடந்த காலத்தை விட தற்போது வேலை நிலை பெருமளவில் மேம்பட்டுள்ளது. தன்னை போல தொழிலாளரின் வாழ்க்கை மேலும் நன்றாக உள்ளது என்று அவர் செய்தியாளரிடம் கூறினார்.
1 2 3 4
|