"18 ஆண்டுகளாக நான் வேலை செய்த்து வருகின்றேன். சின் ஜியாங்கிலுள்ள பல இடங்களில் வேலை செய்திருக்கின்றேன். இப்போது, எங்கள் வேலை நிலை பெருமளவில் மேம்பட்டுள்ளது. முன்பு வேலை மனிதரை சார்ந்திருந்தது. தற்போது இயந்திரமயமாக்க நிலை உயர்ந்துள்ளது. தொழிலாளரின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. குடியிருப்பு வீடுகளில் காற்றுப்பதனாக்கியும் குடி நீர் கருவியும் உள்ளன. என் வருமானம் அதிகரித்து விட்டது. வாழ்க்கையும் வளமடைந்துள்ளது" என்றார் அவர்.
எண்ணெய் அகழ்வு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்று பெரும்பாலோர் கருத்துகின்றனர். ஆனால், சின் ஜியாங்கிலுள்ள பல எண்ணெய் அகழ்வு பகுதிகள் தூய்மையாக உள்ளன. அங்குள்ள வாழ்க்கைச் சூழல் செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சின் ஜியாங்கிலுள்ள பல்வேறு எண்ணெய் வயல்களும் எண்ணெய் அகழ்வு போக்கில் மேற்கொள்ளும் ஒரு முக்கிய பணியாகும் என்று சின் ஜியாங் எண்ணெய் வயல் நிறுவனத்தின் பொது மேலாளர் Chen Xinfa செய்தியாளரிடம் கூறினார்.
"எண்ணெய் அகழும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் செவ்வனே பாதுகாக்க நாங்கள் இயன்றதனைத்தையும் செய்கிறோம். சின் ஜியாங்கின் வாழ்க்கைச் சூழல் பலவீனமானது. பாதுகாக்காவிட்டால், விரைவில் சீர்குறையும். எனவே இந்த பிரதேசத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை கண்டிப்பான முறையில் நிர்வகிக்கிறோம்" என்றார் அவர்.
எதிர்காலத்தில், சின் ஜியாங்கில் உள்ள எரியாற்றலை வளர்த்து பயன்படுத்துவதை அதிகரிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு சின் ஜியாங்கில் கச்சா எண்ணெயின் உற்பத்தி அளவு 3 கோடி டன்னை எட்டும். இயற்கை வாயுவின் உற்பத்தி 1800 கோடி கன மீட்டரை எட்டும். அப்போது, சீனாவின் முக்கிய எரியாற்றல் தளங்களில் ஒன்றாக சின் ஜியாங் மாறிவிடும். அதன் பொருளாதாரமும் சமூகமும் பெரிதும் வளர்ச்சி அடையும். 1 2 3 4
|