கடந்த ஆண்டு, சின் ஜியாங்கில் 2 கோடி டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யும், 500 கோடி கன மீட்டருக்கு மேற்பட்ட இயற்கை வாயும் உற்பத்தி செய்யப்பட்டன. எண்ணெய் மற்றும் பெட்ரோ ரசாயன தொழிலின் விற்பனை வருமானம், 4000 கோடி யுவானைத் தாண்டியது. சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Simayi tieliwaerdi செய்தியாளரிடம் கூறியதாவது—
"எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய துறைகளை வளர்ப்பதன் மூலம், சின் ஜியாங் பொருளாதாரம் விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. சின் ஜியாங்கின் பண வருவாய், எண்ணெய், இயற்கை வாயு மற்றும் நிலக்கரி தொழிலிலிருந்து முக்கியமாக வருகிறது. தொழில் துறையின் வளர்ச்சியில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொழிலிலிருந்து வந்த தொகை 60 விழுக்காடு வகிக்கிறது" என்றார் அவர்.
எரியாற்றல் தொழிலின் வேகமான வளர்ச்சி, சின் ஜியாங் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எரியாற்றல் மற்றும் பெட்ரோ ரசாயன உற்பத்தி பொருட்களின் தேவையை நிறைவு செய்தது மட்டுமல்ல, வேலை வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது. இயந்திர தொழில், கட்டிட தொழில், நீர் சேமிப்பு தொழில் ஆகியவை இதனால் வளர்ச்சி அடைந்துள்ளன.
1 2 3 4
|