• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-18 15:33:24    
எடை குறைப்பதன் திறப்பு-வாய்

cri

கலை........ இல்லை. இப்போது மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துவிட்ட ஒரு நிலையில் பட்டினி கிடப்பதற்கு பதிலாக உணவு குறைவாக உட்கொள்ள வேண்டும். உடம்பை ஒல்லியாக வைக்க வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ராஜா......நீங்கள் சொன்னது சரிதான். உடல் எடையை குறைப்பதற்காக பல வழிமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக சோறு, நூடுல்ஸ், கறி சாப்பிடாமல் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் உண்டால் போதும் என்று கட்டுப்படுத்துகின்றனர். இது சரிதானா?

கலை.......சரியில்லை. குறைவாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் எடை குறைப்பது அறிவியல் முறைப்படி சரியல்ல. இப்படி செயல்பட்டால் குறுகிய காலத்தில் எடை குறையக் கூடும். ஆனால் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். உணவு குறைந்தால் உற்சாகம் குறையும். எடுத்துக்காட்டாக ஆப்பிள் தின்று எடை குறைப்பதென்ற முறையைப் பின்பற்றினால் ஆப்பிளைக் கண்டவுடன் குமட்டிக் கொண்டு வரும். இந்த எடைக் குறைப்பு முறையை நிறுத்தியவுடன் உடம்பு பலூன் போல் வீங்கிவிடும். இது எடைக் குறைப்பு செய்வதில் தோல்வி என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ராஜா......ஆகவே, மக்கள் ஆரோக்கியமாக உடம்பை வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஆரோக்கியமான முறையில் உடம்பு எடையை குறைக்க வேண்டும். அறிவியல் முறையில் சத்து மிகுந்த கலோரி குறைவான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான ஒல்லியான உடலமைப்புடன் தோற்றம் தரலாம்.

1  2  3  4