• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-18 15:33:24    
எடை குறைப்பதன் திறப்பு-வாய்

cri

ஆகவே தீட்டப்படாத அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். இதில் சத்து மட்டுமல்ல மலச்சிக்கல் பெருங்குடல் புற்று நோய், இதய ரத்த நாள நோய் போன்றவற்றை தடுக்கும் தன்மையும் உள்ளது. மக்காச் சோளம், கோதுமை மாவு உணவுப் பொருட்கள் உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு சாதகமானவை. 

கலை...... உணவு பொருட்களை சமைக்கும் போது உப்பு குறைவாக போட வேண்டும். பச்சை காய்களின் சலாட்., வேகவைக்கப்பட்ட கீரை ஆகியவை எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவு பொருட்களாகும். ஆனால் அவற்றின் மேல் கெட்டியான குழம்பு, கறி, சோயாசாஸ் ஆகிவற்றை போட்டால் எடையைக் குறைக்கும் திட்டம் பாழாகிவிடும். உப்பாக சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற இயற்கைச் சுவை கலந்த உணவு பொருட்களை உட்கொள்ளலாம். இந்த உணவுப் பொருட்கள் சுவையானவை. உடம்பின் ஆரோக்கியத்துக்கு துணை புரியும்.

ராஜா........உப்பு குறைவாக உட்கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, உணவு பொருட்களா சாப்பிடுவதற்கு முன், ஒரு கிண்ணம் சூப் அல்லது ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்குப் பிறகு விருப்பமான உணவு பொருட்களை உட்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையில் விருப்பமான உணவு பொருட்களை மெதுவாக ரசித்து உண்பது மக்களின் வழக்கம். வயிறு நிறைய சாப்பிட்ட போதிலும் சிலர் ஒரு கோப்பை சூப்பும் குடிப்பார்கள். இது தப்பான வழக்கமாகும். இது தான் எடை குறைக்க முடியாத அடிப்படை காரணியாகும். இப்படிச் செயல்பட்டால் உட்கொள்ளும் உணவின் அளவு தெரியாமல் மோகும். சிறந்த உணவுப் பழக்கம் பின் வருமாறு......உணவு நேரத்தில் உண்பதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீர் அல்லது சூப் குடிக்க வேண்டும். பிறகு விருப்பமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். இதனால் உணவு பொருட்களை குறைவாக சாப்பிட முடியும்.


1  2  3  4