 72 வயதான வெய் இன முதியவர், "சாவுக்கடல்" என்றழைக்கப்படும் தக்ராமகன் பாலைவனத்தைச்சுற்றி தான் செப்பமிட்ட காரை ஒருவாரம் ஓட்டினார். தட்ப வெட்ப நிலை பூஜயத்துக்குக் கீழ் 24 டிகிரியாக இருந்த நிலையில் குட்டைக் கால்சட்டை அணிந்து கடும் குளிருக்கு அறைகூவல் விடுத்தார் என்பதை உங்களால், நம்பமுடிகிறதா? வியப்பாக இருக்கிறது அல்லவா? இன்றைய நிகழ்ச்சியில், Ma Wen Hui எனும் இந்த வெய் இன முதியவரை அறிமுகப்படுத்துகின்றோம்.
முதல் பார்வையில், அவருக்கு 50 வயது தான் என்று அனைவருமே கூறுகிறார்கள். அவர் துடிப்பானவர். காற்று வீசுவது போல் வேகமாக நடக்கிறார். குறிப்பாக, அவர் ஒளிவு மறைவின்றி தன்னம்பிக்கையுடன் இருப்பதால், பார்ப்பதற்கு அவர் மிகவும் இளமையாகத் தெரிகிறார். அவர் ஒரு கார் ஓட்டுநராக இருந்து, பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். கார் ஓட்டும் திறமை மிகவும் சிறந்தது. காரின் செயல்பாட்டையும் மிகவும் அறிந்து வைத்திருக்கிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், ஓய்வாக வாழ்க்கை நடத்த அவ்வளவு விரும்பவில்லை. எனவே, கார் பந்தயம், கடும் குளிர்த்தாக்கம் போன்ற அறைகூவல்மிக்க போட்டிகளில் அவர் அடிக்கடி கலந்து கொள்கின்றார்.
1 2 3 4
|