• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-30 14:00:57    
வெய் இன முதியவர் Ma Wen Hui பற்றி

cri

"கட்டிமுடிக்கப்படாத Ruo Qiang இலிருந்து Qie Moக்குச்செல்லும் பாதையில் ஒட்டுவது. மிகவும் கடினம். பாதையின் சில பகுதிகள், மணற்பாங்கானவை. மணலில் காரை ஓட்ட முடியவில்லை. இந்நிலையில், கார்ச் சக்கரங்களின் கீழ சில பொருட்களைப் போட்டு, அவற்றின் மீது தான் ஓட்டமுடிந்தது" என்றார்.

பாலைவனத்தில், பகலில் கடும் வெப்பம். என்ஜின் சூடாகாமல் தடுப்பதற்காக, அவர் காற்று விடும் கருவியைத் திறந்து கடும் வெப்பத்தை குறைக்கலாம். ஆனால், ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டார். உடல் முழுவதிலும் நிறைய வியர்வை வெளியேறியது.

Ma Wen Huiஉடன் போட்டியில் கலந்து கொள்ளும் துணை ஒட்டுநர், ஊனமுற்றவர். பாலைவனத்தில் வளரும் Hu Yang எனும் ஒரு வகை Popular மரத்தை பார்ப்பது அவரது பெரும் விருப்பமாகும். இதைக் கேட்ட Ma Wen Hui அவருடைய இவ்விருப்பத்தை நனவாக்க, அவரைத் தம்முடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். Ma Wen Hui உற்சாகமிக்கவர். நட்பானவர். அவரது நண்பர் Su Sheng Zhi பின்வருமாறு அவரை பாராட்டியதாவது

"ஏழை குடும்பத்தில் அவர் பிறந்தார். இருப்பினும், நட்புணர்ச்சிமிக்கவர். பிறருக்கு இன்னல் ஏற்படும் போது, சமாளிக்க முடியாத பிரச்சினை ஏற்படும் போது, அவர் அடிக்கடி இவர்களுக்கு உதவிடுவார். இன்னல்களை நீக்கச்செய்தார்" என்றார்.

1  2  3  4