• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-30 14:00:57    
வெய் இன முதியவர் Ma Wen Hui பற்றி

cri

கார் ஒட்ட விரும்புவது தவிர, Ma Wen Hui பிரபலமான Guitar இசைக்கும் கலைஞராகவும் திகழ்கிறார். பத்துக்கும் அதிகமான நாடுகளின் 100க்கும் அதிகமான நாட்டுப்புறப்பாடல்களை அவரால் கிட்டாரில் இசைக்க முடியும். இது மட்டுமின்றி, சீன மொழி, விகுர் இன மொழி, தத்தார் மொழி ரஷிய மொழி உள்ளிட்ட மொழிகளிலும் பாட முடியும். Ma Wen Hui இன் தந்தை, வெய் இனத்தவர். தாய், தத்தார் இனத்தைச் சேர்ந்தவர். தந்தையின் உற்சாகமும் தாயின் விவேகமும் உடைய அவர், அவரது குடும்பத்தின் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் ஒன்றுபடும் போது அவர் பாட்டுப் பாடி, கிட்டார் இசைத்து அனைவரையும் மகிழச்செய்வார். அவர் கூறியதாவது:

"வேறுபட்ட இசையும் பாடலும் எனக்கு வேறுபட்ட உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உணர்ச்சிமிக்க பாடல்களை இசைக்க நான் மிகவும் விரும்புகின்றேன். இசை ஒலிக்கிடையில், எனது இளமை, தாதல், உற்றார் உறவினர் அன்பு, நட்புணர்வு ஆகியவற்றை நினைவுகூற விரும்புகின்றேன். ஆண்டு முழுவதிலும் இறைச்சி சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஒரு திங்கள் பால் தேனீரை குடிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. இசை இல்லாத உளகம், இருளான உலகம் என்று நான் நினைக்கின்றேன்" என்றார்.

எந்த இன்னலுக்கும் அஞ்சாதவர், அவர். இவ்வாண்டு பிப்ரவரியில், சிங்கியாங்கின் தலைநகரான உருமுச்சி நகர மக்கள் பூங்காவில், குளிர் பூஜ்யத்துக்குக்கீழ 24 டிகிரியாக இருந்தநிலையில் கடும் குளிருக்கு அறை கூவல் விடுத்து, சிங்கியாங் முழுவதிலும் முதலிடம் வகித்தார். பிறரின் கருத்தில் நினைக்க முடியாத விஷயம், அவரின் கண்ணோட்டத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

"கடும் குளிருக்கு அறை கூவல் விடுவதன் மூலம், சிங்கியாங்கின் குளிர்காலத்தின் மீது மக்களின் நேசிப்பை தட்டி எழுப்ப விரும்புகின்றேன். ஒவ்வொரு முதியோரும் தம் உயிரைப் பேணிமதித்து, வாழ்க்கையையும் இயற்கையையும் நேசிக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, அவரது திங்கள் வருமானம் சுமார் 600 யுவான் மட்டுமே, அதன் பொரும்பாலான பகுதி, கார் பந்தயத்தில் செலவழிகிறது. அல்லது பிறருக்கு உதவிடப் பயன்படுகிறது. சிறு தொகை மட்டுமே தமக்கு பயன்படுத்துகிறார். அவரது மனைவி Zhang Xiu Qing மிகவும் அன்பானவர். Ma Wen Huiஇன் செயலுக்கு எப்பொழுதும் ஆதரவளிக்கின்றார். அவர் கூறியதாவது:

"இப்போது அவர் செய்யக் கூடிய செயல்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன். இனிமேல், செய்யமுடியாத போது வீட்டில் ஓய்வு எடுக்கும் போது, அவரைக் கவனிப்பேன்" என்றார்.


1  2  3  4