• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-30 14:00:57    
வெய் இன முதியவர் Ma Wen Hui பற்றி

cri

72 வயதான அவர், கார் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டு 2005ம் ஆண்டு தக்ராமகன் பாலைவனக் கார் போட்டி முழுவதிலும் பங்கேற்றார். இது குறித்து அவர் கூறியதாவது:

"முதியவர்களும் துடிப்பானவர்கள் தான், தூண்டுதல்மிக்க போட்டியில் பங்கெடுக்க முடியும். வெற்றி பெறமுடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே, நான் போட்டியில் கலந்து கொண்டேன்" என்றார்.

இதை உறுதிப்படுத்த, அவர் கடினமாகச் செயல்பட்டார். முதலில், வயது காரணமாகவும், காரின் நிலைமை காரணமாகவும், அவர் அனுமதிக்கப்படவில்லை.

4000 கிலோமீட்டர் தொலைவுள்ள தக்ராமகன் பாலைவனத்தைச் சுற்றிலும் கார் ஓட்டும் போட்டியில் அவர் கலந்து கொண்டார். "சாவுக்கடல்" என்றழைக்கப்படும் தக்ராமகன் பாலைவனம், சீனாவில் மிகப் பெரிய பாலைவனமாகும். சிங்கியாங்கின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கார்பந்தயம், இதுவாகும். வேகமாக ஓட்டுவது, இப்போட்டியின் நோக்கம் அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பாதையை ஓட்டிமுடிப்பது என்பது தான் இப்போட்டியின் குறிக்கோள். ஓட்டுநரின் மனஉறுதியையும் ஓட்டும் நுட்பத்தையும் சோதித்துப் பார்ப்பது, இதன் நோக்கம். பெரும்பாலான ஓட்டுநர்களைப் பொறுத்த வரை, இது ஒரு பெரிய அறைகூவலாகும். 72 வயதான Ma Wen Hui முதியவருக்கோ மேலும் ஒரு கடும் சோதனையாகும். அந்நாட்களை நினைவுகூடும் போது, அவர் மனதில் இன்னமும் கவலை உணர்ச்சி ஏற்பட்டது. அவர் கூறியதாவது:

1  2  3  4