• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-28 15:08:40    
சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அன்பு காட்டுவது

cri

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய பிரச்சாரத்தின் விளைவாக, சமூகத்தில் இது பற்றிய பயம் பெரிதும் குறைந்துள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்கி வைக்கும் செயல்களும் குறைந்துள்ளன. பலர் எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு காட்டி, அவர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்கின்றனர்.

43 வயதான தோ துங்சியே, தென்மேற்கு சீனாவின் குய் சோ மாநிலத்தில் ஒரு சாதாரண விவசாயி. 10 ஆண்டுகளுக்கு முன், அவருக்கு H.I.V. கிருமி தொற்றி, 3 ஆண்டுகள் அல்லல்பட்டனர். தற்போது, சிகிச்சை மூலம், நோய் நிலைமை ஓரளவு குணம் அடைந்துள்ளது. சமீபத்தில், H.I.V. கிருமி தொற்றியவர்களின் பிரதிநிதியாக அவர் பெய்ஜிங் வந்து எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய ஒரு அரசு சாரா கருத்தரங்கில் கலந்து கொண்டார். தமது ஊரில் H.I.V. கிருமி தொற்றியவர்கள் இருப்பதாகவும், அவர்கள் எல்லோருமே அரசிடமிருந்தும் சமூகத்திடம் இருந்தும் உதவி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் எல்லோருமே H.I.V. கிருமி தடுப்பு ஆராய்ச்சியில் பலனை அடைந்துள்ளோம். எங்களின் குழந்தைகள் இலவசமாக கல்வி பெறலாம். மருந்துகளும் இலவசமாக கிடைக்கின்றன. H.I.V. கிருமி தொற்றியவர், குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள H.I.V. கிருமிதொற்றியவரைப் பொறுத்த வரை, இலவச H.I.V. கிருமி தடுப்பு ஆய்வின் பயனை கிடைப்பது மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

தற்போது, அவருடைய நோய் சீராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களைப் போல் வாழ்க்கை நடத்த முடிகிறது. இவை எல்லாம் அரசும் சமூகமும் காட்டிய அன்பினால் கிடைத்தது என்று தோ துங்சியே கூறினார்.

1  2  3  4