• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-28 15:08:40    
சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அன்பு காட்டுவது

cri

கிழக்கு சீனாவின் ஆன் குய் மாநிலத்தின் புஃ யாங் நகரில், சில தொழில் முனைவோர்கள் ஒரு உதவி சங்கத்தை உருவாக்கியுள்ளனர். சில எய்ட்ஸ் குழந்தைகளுக்கு இது கல்வி உதவியை வழங்குகின்றது. வாரந்தோறும், இது நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து, இந்த குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருகின்றது. 2 ஆண்டுகால பணியினால், உதவி பெற்ற குழந்தைகளின் மனதில் தெளிவான மாற்றம் காணப்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் சாங் யீங் அம்மையார் கூறினார்.

பாரபட்சமான சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்திருந்தனர். எமது சங்கம், ஒவ்வொரு குழந்தையிடமும் கவனம் செலுத்துகிறது. அவர்கள் கல்வி வாய்ப்பைப் பெற்று, திறனை வெளிக்காட்ட முடியும். நடவடிக்கைகளின் மூலம், அவர்கள் தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளனர் என்றார் அவர்.

தற்போது, H.I.V. கிருமி தொற்றிய 280 குழந்தைகள் சங்கத்தின் நிதியுதவி பெற்று, கல்வி கற்கின்றனர். மதிப்பெண் அதிகரித்து வருகின்றது. குழந்தைகளின் சிரிப்பு சாங் யீங்கிற்கும், சக பணியாளர்களுக்கும் மகிழ்ச்சி தந்துள்ளது.

பல நோயாளிகளும் எய்ட்ஸ் நோயை எதிர்த்து போராடுவதாக அறிவித்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு, 29 வயது லீ சியாங், 3 எய்ட்ஸ் நோயாளிகளுடன் செம் மரக்காடு எனும் அமைப்பை உருவாக்கினர். அவர் கூறியதாவது,

பல்வகையான வடிவங்களின் மூலம், எமது தற்காப்பு நடவடிக்கையிலும் கலந்து கொள்ளுமாறு H.I.V. கிருமி தொற்றியவர்களை வற்புறுத்துகின்றோம். தொலைபேசி தொடர்பு அமைப்பு, இணையம், இதழ் போன்ற தகவல் பரிமாற்ற அமைப்புகளை உருவாக்கினோம். தற்காப்பு திறன் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றோம். நூல்களை வெளியிட்டு, படக் காட்சியை நடத்தி, தொலைக்காட்சி விளக்கத் திரைப்படங்களை தயாரித்து, எய்ட்ஸ் நோய் தடுப்பு அறிவுகளை பிரச்சாரம் செய்கின்றோம் என்றார் அவர்.

தற்போது, இத்தகைய எய்ட்ஸ் நோயாளி அமைப்புகளின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. அவற்றின் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் ஊக்கம் அளித்து, நோயைத் தோற்கடிக்க முயற்சிக்கிறனர்.


1  2  3  4