
(தலைமை அமைச்சர் வென் சியாபாவ் எய்ட்ஸ் நோயாளிகளுடன் கைகுலுக்குகிறார்.)
1980ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் சீனாவில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி கண்டுப்பிடிக்கப்பட்டது முதல் இதுவரை சீனாவில் மொத்தம் 8 இலட்சத்து 40 ஆயிரம் மக்களுக்கு H.I.V. கிருமி தொற்றியுள்ளது. நோய் நிலைமையை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவி செய்வது, சீன அரசின் சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகத்தின் பரந்த கவனத்தை ஈர்க்கும் பணியாக மாறியுள்ளது.
சிகிச்சை பெறுவதில் உள்ள சுமையை குறைக்க, அரசு அவர்களுக்கு சலுகை காட்டும் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, வாழ்க்கை இன்னலுக்குள்ளாகிய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச கிருமி தடுப்பு மருந்துகளையும் சிகிச்சைகளையும் வழங்குகின்றது. மருத்துவமனைகள் H.I.V. கிருமி தொற்றிய கர்ப்பிணிக்கு இலவச சுகாதார யோசனை, மகப்பேறு சேவை ஆகியவற்றை வழங்குகின்றன. தவிர, பொருளாதார இன்னலுக்குள்ளாகிய எய்ட்ஸ் நோயாளிகளும் அவர்களுடைய குடும்பத்தினர்களும் அரசிடமிருந்து வாழ்க்கை உதவி தொகையை கிடைக்கலாம். எய்ட்ஸ் நோயினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நிலை அரசுகளும் சமூக வட்டாரங்களும் வாழ்க்கை, கல்வி, உளவியல் ஆலோசனை ஆகிய துறைகளில் அன்பையும் உதவியையும் வழங்குகின்றன.
இது மட்டுமல்ல, பல்வேறு தனிநபர்களும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவி வழங்க விரும்புகின்றனர். தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள யூன்னான் மாநிலத்தின் தலைநகரான குன் மின் நகரில், சூரிய ஒளி குடும்பம் எனும் அமைப்பு உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவி செய்யும் அரசு சாரா அமைப்பாக இது திகழ்கின்றது. இதன் பணியாளர் லீ யூன் கூறியதாவது,
1 2 3 4
|