
எய்ட்ஸ் அனாதை
யூனான் மாநிலத்தில் H.I.V. தொற்றிய 80 விழுக்காடு மக்களுக்கு ஊசி மூலம் போதை பொருடளை ஏற்றுவதால் எய்ட்ஸ் ஏற்பட்டது. நோய்வாய்பட்டதினால், நீண்டகாலமாக சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். அடிப்படை வாழ்க்கைத் திறனை இழந்துவிட்டனர். போதை பொருள் உட்கொள்ளும் பழக்கத்தால், சமூகம் அவர்களை பாரபட்சமாக நடத்துகிறது. எமது சூரிய ஒளி குடும்பம் அவர்களுக்கு உளவியல் ஆதரவு அளிக்கின்றது. சமூகத்துக்குத் திரும்புவதில் அவர்களுக்கு உதவி அளிக்கின்றோம் என்றார் அவர்.
போதை பொருள் உட்கொள்வதினால் H.I.V. கிருமி தொற்றியவரின் தன்னம்பிக்கையை மீட்க உதவிடும் வகையில், இந்த அமைப்பின் பணியாளர்கள் அவர்களுக்கு கைவினைப் பொருள் தயாரிப்பு, சுவர் ஓவியத்தை தீட்டுவது போன்ற தொழில்களை கற்பிக்கின்றனர். மேலும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு பயிற்சியை வழங்குகின்றனர். 2003ஆம் ஆண்டின் இறுதியில், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படத் துவங்கியது முதல், இதுவரை, சூரிய ஒளி குடும்பம், 270 எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் 115 குடும்பங்களுக்கும் பாதுகாப்பு பயிற்சி அளித்துள்ளது.
சில குடும்பங்களில், குழந்தைகள் எய்ட்ஸ் நோயினால் பெற்றோர்களை இழந்துவிட்டனர். சிலருக்கு H.I.V. கிருமிதொற்றியது. கல்வி கற்க முடியாமல் அவர்கள் இன்னலுக்குள்ளாகினர். அது மட்டுமல்ல, தாழ்வு மனப்பான்மையால் அல்லல்படுகின்றனர். தற்போது, சமூகத்திடமிருந்து அவர்களுக்கு மேலும் அதிகமான அக்கறை கிடைக்கின்றது.
1 2 3 4
|