• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 17:50:17    
பறவைக் காய்ச்சலைக் கண்டு பயப்படணுமா?

cri
கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம்.

ராஜா...கோழி பறபற கொக்கு பறபற அப்படின்னு பல நாடுகளில் பறவைகளை விரட்டி விரட்டிக் கொல்றாங்க. பெய்சிங் நகரத்தில் மட்டும் உயிருள்ள பறவைகளை விற்பனை செய்யும் 168 சந்தைகள் மூடப்பட்டன. உலகம் எல்லாமே பறவைக் காய்ச்சல் பற்றி பரபரப்பா பேசுது. சீனாவில் மட்டுமல்ல தாய்லாந்து வியத்நாம், தென்கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் கிருமி பரவத் தொடங்கியிருக்குது. கலையரசி இந்த பறவைக் காய்ச்சலைக் கண்டு பயப்படணுமா?

கலை...பயப்படத் தேவை இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது இல்லையா?

ராஜா....ஆமா. நம்ம சீன வானொலி நிலையத்துல கூட எல்லா ஊழியர்களுக்கும் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி போட்டாங்க. நானும் போட்டுக் கிட்டேன். AVIAN FLU எனப்படும் இந்தப் பறவைக் காய்ச்சல் புராணத்தை கொஞ்சம் சொல்லுங்க.

1  2  3  4