• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 17:50:17    
பறவைக் காய்ச்சலைக் கண்டு பயப்படணுமா?

cri

கலை....இன்னும் கேளுங்க. ஜனவரி 20 முதல் மார்ச் 20 வரை கால நிலை இன்னும் வெதுவெதுப்பாகி புல்வெளி எல்லமே சிக்கீரமே பசுமையாகும் என்று பேரரசர் ஹுவாங்கின் மருத்துவ சாஸ்திரம் கூறுது.

ராஜா....அப்படியானா சூடு சம்பந்தப்பட்ட தொற்றுநோய் இன்னும் பரவும். இல்லீங்களா? சரி. சீனாவில் விளையும் நட்சத்திர வடிவில் உள்ள சீரகம் அதாவது சீனத்துச் சோம்பு இந்த பறவைக் காய்ச்சலுக்கு மருந்து என்று நாளேடுகளில் படிச்சேனே.

கலை....நீங்க சரிவர படிக்கலை. இந்த சீனத்து பெருஞ்சீரகம் இதை ஆங்கிலத்தில் STAR AMSEED என்று சொல்வார்கள். இதை உணவில் சேர்ப்பதால் நோய் குணமாகாது. இது இறைச்சி, மீன் போன்றவற்றை ஜீரணிப்பதற்கு உதவுகின்றது.

ராஜா....ஆமாம். இந்தியாவில் கூட கறிக் குழம்பு சாப்பிட்ட பிறகு கொஞ்சம் பெருஞ்சீரகத்தை அள்ளி வாயில போட்டுக் கொள்வாங்க கேட்டால் கவிச்சுவாசனை அடிக்காம இருக்கறதுக்குன்னு சொல்வாங்க. ஆனால் அதுல ஜீரண சக்தி இருக்குது. இல்லியா?

கலை....ஆமாம். மேலும் சீனத்துப் பெருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள் கொண்டுதான் பறவைக் காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ராஜா....அதனால் தான் சமீபத்துல இந்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமனி ராம்தாஸ் பெய்ச்சிங் வந்து சீன சுகாதார அமைச்சரை சந்திச்சுப் பேசியிருக்கார். சீன பாரம்பரிய மருத்துவம் போலவே இந்தியாவின் பாட்டி வைத்தியம், சித்தமருத்துவம், ஆயுர் வேத மருத்துவம் என்று எல்லாமே மிகவும் பழம்பெருமை வாய்ந்தவை. ஆகவே சீன பாரம்பரிய மருத்துவத்தையும் சித்த மருத்துவத்தையும் இணைத்து தடுப்பு மருந்து தயாரிக்கும் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட ஒப்பந்தம் போடுவது பற்றி டாக்டர் அன்புமணி விவாதித்திருக்கிறார். சரி, பறவைக் காய்ச்சல் தடுப்புக்கு என் என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்கணும்னு சொல்லுங்க.

கலை....முதலில் உணவுக் கட்டும்பாடு.

ராஜா....ஆமா. அது நிச்சயம் வேணும். நான் தடுப்பூசி போட்டுக்கிட்டேன் என்று என் மனைவியிடம் சொன்னபோது நல்ல காரியம் செஞ்சீங்க. அப்படியே அந்த கண்றாவி இறைச்சியை விட்டுத் தொலையுங்களேன்னு சொன்னாங்க.

கலை.....அவ்வளவு பயப்படத் தேவை இல்லே. கோழிக் கறியை 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வேகவைச்சா கிருமிகள் கொல்லப்பட்டுவிடும். அப்புறம் பச்சை முட்டை தின்னக் கூடாது. அவித்த முட்டை தின்பது நல்லது. தினமும் பாசிப்பயறு கஞ்சி குடிக்கணும். உடம்பு வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்பரவும் அபாயம் அதிகம். பாசிப்பயறு உடம்புக்கு குளிர்ச்சி தருவது. அப்புறம் மனதில் பதற்றம் பரபரப்பு இல்லாமல் நிம்மதியான தூக்கம் தேவை. நல்ல உடற்பயிற்சி செய்யணும்.

ராஜா....வெளியே போகும் போது முகமூடி போட்டுக் கொள்ளணும். கைகால்களை சுத்தமாக் கழுவணும். கோழிப் பண்ணை மிருகக் காட்சி சாலை இப்படிப்பட்ட இடங்களுக்கு போகாமல் இருப்பது நல்லது. ஆமா. பறவைக் காய்ச்சல் நோய் வந்தால் என்ன அறிகுறி?

கலை....தாகம், வாய் உலர்ந்து போவது, கண்கள் சிவப்பாதல், தொண்டை புண், உடம்பெங்கும் வெப்பம் பரவுதல்.

ராஜா....சரி தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்து பறவைக் காய்ச்சலே பறந்து போ என்று சொல்வோம்.. நேயர்களே பறவைக் காய்ச்சலைக் கண்டு பயப்படணுமா என்பது பற்றி இப்போது கேட்டீர்கள்.

கலை.....இத்துடன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைபடைகின்றது.


1  2  3  4