• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 17:50:17    
பறவைக் காய்ச்சலைக் கண்டு பயப்படணுமா?

cri

ராஜா... இதைப் பற்றி விளக்கமாச் சொல்ல முடியுமா?

கலை....சொல்றேன். ஆங்கில மருத்துவ டாக்டர் நோய்பரப்பும் கிருமியை இந்தக் கிருமிதான் என்று குற்றம் சாட்டி அதற்கு மரண தண்டனை விதித்து ஒழிக்க மருந்து தருகிறார். ஆனால் சீன முறை பாரம்பரிய மருத்துவரோ அந்தக் கிருமிகள் வளர முடியாத ஒரு சூழலை நமது உடம்பில் உருவாக்குகிறார்.

ராஜா...அப்படியானால் தடுப்பூசி போட்டு பயனில்லையா?

கலை....அப்படிச் சொல்ல முடியாது. கிருமிகள் பலவகைப்பட்டவை என்பதால் தடுப்பூசி மருந்து பயனில்லாமல் போகலாம் என்று சீன முறை மருத்துவம் கூறுகின்றது.

ராஜா...இந்த பறவைக் காய்ச்சல் குளிர்காலத்தில் தான் வருமா?

கலை....பொதுவாக சீன மருத்துவம் நம்பும் பஞ்சபூதங்களில் காற்றும் நெருப்பும் கோழியிடம் இருக்குது. அதனால இந்த பறவைக் காய்ச்சல் கிருமியின் தன்மையும் காற்றும் நெருப்பும் ஆகும். குளிர்காலத்தின் தன்மையும் நெருப்பு என்பதால் குளிர்காலம் எச்5என்1 கிருமி வளர்வதற்கு ஏற்றகாலமாக ஆகிறது. இது பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பேரரசர் ஹுவாங்கின் மருத்துவ சாஸ்த்திரம் விளக்கமாகச் சொல்லியிருக்குது.

ராஜா....அந்த விளக்கத்தை சொல்லுங்களேன்.

கலை.....சீன பாரம்பரிய காலண்டர்படி (சந்திர நாட்காட்டியின் படி)ஒரு குறிப்பிட்ட ஆண்டின் புவியியல் மற்றும் உயிரியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் சுழற்சி அடிப்படையில் மாறிமாறி வருபவை. ஆகவே ஒரு வருடத்தின் காலநிலை மாற்றங்கள் மற்றும் அதன் விளைவால் மக்களின் உடல்நிலையில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு சில அடிப்படை விதிகள் இருக்குது. அந்த சுழல்முறை மாற்றத்தின் படி இந்த ஆண்டின் நவம்பர் 20 முதல் ஜனவரி 20 வரை காலநிலை வெதுவெதுப்பாக இருக்கும். ஆகவே மற்றகுளிர் காலத்தில் மக்களுக்கு தடுமம் ஏற்படுவது போல இந்தப் பருவத்தில் ஏற்படாது. ஆனால் சூடு சம்பந்தமான உடல் நலச் சிக்கல்கள் மக்களுக்கு ஏற்படும்.

ராஜா...ஆமா நீங்க சொன்னீங்களே கோழி இனத்தின் தன்மை நெருப்பும் காற்றும். அப்படின்னு.

1  2  3  4