• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 17:50:17    
பறவைக் காய்ச்சலைக் கண்டு பயப்படணுமா?

cri

கலை....சொல்றேன். முதன் முதலில் 2003ம் ஆண்டு டிசெம்பரில் இந்தப் பறவைக் காய்ச்சலைப் பரப்பும் எச்5என்1 கிருமி தாய்லாந்து வியத்நாம், ஜப்பான், தென் கொரியா வழியாக பரவத் தொடங்கியது. 2004ம் ஆண்டு ஜுலை திங்களில் சீனாவில் உள்ள இடம் பெயரும் பறவைகளிடம் இந்த கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜா...இந்த நோய் பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கணும்? பெய்ச்சிங்கில் சிலர் முகமூடி போட்டுக்கிட்டு போறதைப் பார்த்தேன்.

கலை....வாயையும் மூக்கையும் மூடி முகமூடி கட்டுவதால் காற்றில் கலந்து வரும் கிருமி தொற்றும் வாய்ப்பு குறைகின்றது. இந்தக் கிருமி பறவைகளிடம் இருந்து தான் தொற்றுது. ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றியதாக இது வரை நிரூபிக்கப்படவில்லை.

ராஜா...சீன பாரம்பரிய மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு இருக்குதுன்னு சொல்றாங்க. பறவைக் காய்ச்சல் பற்றி சீன முறை மருத்துவம் என்ன சொல்லுது?

கலை...முதலில் பலவகை பாக்டீரியாக்களுடனும் கிருமிகளுடனும் மனிதன் சேர்ந்து வாழ வேண்டியிருக்கிறது என்பதை சீன முறை பாரம்பரிய மருத்துவம் நம்புகின்றது. இதில் மேற்கத்திய மருத்துவத்திற்கும் சீன முறை மருத்துவத்திற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் என்ன வென்றால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தான் பிரச்சினைக்குக் காரணம் அப்படின்னு மேற்கத்திய மருத்துவம் சொல்லுது. சீன முறை மருத்துவமோ மனிதனுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்டீரியாக்களும் கிருமிகளும் அவனுடைய உடம்பின் உள்புறத்தில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்தி வலுவடைந்து வளரத் தொடங்குகின்றன என்று கூறுகின்றது.

1  2  3  4