• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-01 10:36:42    
இணக்கமாக வாழும் காஷ் நகரம்

cri

காஷ் நகரம், சீனாவின் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பண்டை காலப பட்டுப் பாதையின் மையமாகத் திகழும் இந்நகரம், முன்பு சீன வணிகர்களும் வெளிநாட்டு வணிகர்களும் ஒன்று திரளும் சர்வதேச வணிகத் துறைமுகமாகவும் கீழை மற்றும் மேலை நாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்ற மையமாகவும் திகழ்ந்துவந்தது. கடந்த பல நூறு ஆண்டுகளில் அங்கு வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் அயரா உழைப்பினாலும் அறிவாற்றாலும் உலகப் புகழ்பெற்ற பழம் பெரும் நகரை உருவாக்கினார்கள். அண்மையில் எமது செய்தியாளர், சிங்ஜியாங்கின் பிரபல வரலாற்றுச் சிறப்பும் பண்பாட்டுப் பெருமையும் மிக்க காஷ் நகருக்குச் சென்று உய்கூர் இன மக்களின் பழக்க வழக்கங்களை நேரில் கண்டார். அந்த நகரின்

அமைதியும் இணக்கமும் நிறைந்த சூழல் அவரைப் பரவசப்படுத்தியது.

இரவில், காஷ் நகரில் வாகனப் போக்குவரத்து குறைவு. ஆனாலும், பரபரப்பான வாழ்க்கைச் சூழல் காணப்படுகிறது. இந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏதிகாழ் மசூதி சதுக்கம், மக்கள் பொழுதுபோக்கும் நல்ல இடமாக விளங்குகின்றது.

உய்கூர் இன இளைஞர் யாலிகுவன், இச்சதுக்கத்தில் நிழல் படம் எடுக்கும் கடையொன்றை நடத்திவருகிறார். வியாபாரம் பரவாயில்லை. அவர் செய்தியாளரிடம் கூறியதாவது,

நான் இங்கு 5 ஆண்டுகளாக கடைநடத்துகிறேன். இரவு 9 மணி முதல் மறு நாள் காலை 2 மணி வரை இங்கு இரவுச் சந்தை இயங்குகிறது. கோடை காலத்தில் ஆட்கள் அதிகம் வருகின்றனர். ஜூலை முதல் அக்டோபர் வரை கூட்டம் நெரிசலாக உள்ளது.

1  2  3  4