
காஷ் நகரம், பல்வேறு தேசிய இன மக்களின் அன்பான உணர்வினால் உருவானது. இது தேசிய இன ஒற்றுமை வாய்ந்த நகரம் என்று 16 வயது உய்கூர் இன இளைஞர் மிழ் அகமெதி நன்கு உணர்ந்துள்ளார். ஏனெனில், புசியூ என்னும் ஹென் இனத்தைச் சேர்ந்தவர் தமது உயிரை அர்ப்பணித்து அவரைக் காப்பாற்றினார்.
11ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், 5 வயது சிறு அகமெதி, வீதியில் விளையாடிக்கொண்டிருந்த போது கவனமின்மையினால், மூடப்படாத நிலக்கரி வாயு குழாய் போடப்பட்ட குழிக்குள் விழுந்துவிட்டார். அப்போது, பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் குழியில் இருந்து நச்சு வாயு கசிந்துகொண்டே இருந்தது. அந்த வழியாகச் சென்ற புசியூ என்பவர் இந்த ஆபத்தான நிலைமையைக் கண்டு தயக்கமின்றி உடனே குழிக்குள் இறங்கி சிறுவன் அகமதியைக் குழிக்கு வெளியே தூக்கிவந்தார். ஆனால், நச்சு வாயுவினால் அவர் மயங்கினார். மக்கள் அவரைக் குழியிலிருந்து வெளியே எடுத்த போது அவர் இறந்துவிட்டிருந்தார்.
இதற்குப் பின்னர், ஆண்டுதோறும் விழா நாட்களில், மிழ் அகமெதியும் அவருடைய தகப்பனாரும் காலஞ்சென்ற புசியூவின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் நலம் விசாரிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு புசியூவின் குடும்பத்தினர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதால் இந்தத் தொடர்பு தடைப்பட்டது. இருப்பினும், புதிய வீட்டின் விலாசம் பற்றி மிழ் அகமெதி விசாரித்துக் கொண்டே இருக்கிறார். 1 2 3 4
|