
காஷ் வட்டாரத்தில், தேசிய இன ஒற்றுமையைப் பேணிக்காத்து, சமூகத்தின் ஒன்று திரளும் ஆற்றலை வலுப்படுத்தி, இன்பமான வாழ்க்கைக்காகப் பாடுபட வேண்டும் என்ற கருத்து, பல்வேறு தேசிய இன மக்களிடையில் நிலவுகிறது. பல சமூக அமைப்புகளும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் தேசிய இன ஒற்றுமைத் தங்களது உழைப்புப் பண்பாட்டில் முக்கிய பகுதியாகக் கருதிச் செயல்படுகின்றன. 1973ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காஷ் கட்டடத் தொழில் மற்றும் சுற்றுலா குழுமம், காஷ் பிரதேசத்தில் மிகப் பெரிய தொழில் நிறுவனமாகும். அதன் மொத்த மூல தனம் 130 கோடி ரன்மின்பி யுவான் ஆகும். இதில் சுமார் மூவாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இக்குழுமத்தின் துணை மேலாளர் கொபெங் பெருமிதத்தோடு எமது செய்தியாளரிடம் கூறியதாவது,
2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக, எமது குழுமம், வறுமை ஒழிப்பு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. காஷ் முழுவதிலும் எமது குழுமம் முதலில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளத் துவங்கியது. இக்குழுமத்தின் ஒவ்வொரு ஊழியரும் திங்கள்தோறும் தங்களது சம்பளத்திலிருந்து 50 முதல் 100 யுவான் வரை ஏழைகளுக்கு உதவியாக வழங்குகின்றனர். தற்போது, எங்கள் குழுமத்திலுள்ள நடு நிலை மற்றும் நடு நிலைக்கு மேற்பட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்களும் வறிய தொழிலாளர்களுடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் உறவை நிறுவியுள்ளனர் என்றார்.
1 2 3 4
|