
இங்குள்ள சமூகப் பாதுகாப்பு நிலைமை எப்படி இருக்கு? என்று எமது செய்தியாளர் கேட்ட போது, யாலிகுவன் சீன மொழியில் தட்டுத்தடுமாறி பதிலளித்தார். அவர் கூறியதாவது,
இங்கு சமூக நிலைமை மிகவும் நல்லது. பகலிலும் சரி இரவிலும் சரி, மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இங்குள்ள மக்கள் நற்குணமுடையவர்கள். மக்கள் இன்பமாக வாழ்கின்றனர். எடுத்துக்காட்டாக, இரவு சந்தையில் மக்கள் கூட்டம் நெரிசலாக இருந்த போதிலும், மிகவும் பாதுகாப்பாக உள்ளது. சமூகப் பாதுகாப்புப் பிரச்சினை இல்லவே இல்லை என்றார்.
காஷ் நகரம், பெரிதும் உய்கூர் இன மக்கள் பல்வேறு தேசிய இன மக்களுடன் கலந்து வாழும் இடம். ஹென் இன மக்கள் தவிர, ஏனைய பெரும்பாலான மக்கள் இஸ்லாமிய மத நம்பிக்கையுடையவர்கள். பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையை ஒற்றுமை நிலவுவதாலும், உள்ளூர் அரசு நிறுவனங்கள், பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் மத விவகாரங்களையும் உரிய முறையில் கையாளுவதாலும் சமூகம் உறுதியாக உள்ளது. மதக் கொள்கை முழுமையாகவும் சரியாகவும் நடைமுறைப்படுத்தப்படுவது, காஷ் வட்டாரத்தின் தேசிய இன ஒற்றுமைக்கும் சமூக உறுதிப்பாட்டுக்கும் முக்கிய காரணி என்று தேசிய இன ஒற்றுமை மற்றும் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான காஷ் நகராட்சி அதிகாரி உலேமா அப்துல் காதர் கூறினார். அவர் மேலும் கூறுகிறார்,
காஷ் நகரில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் மத விவகாரப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் போதிய அளவில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அரசு நிறுவனம் உத்தரவாதமளித்துள்ளது. தற்போது காஷ் நகர மத பிரமுகர் ஒருவர் சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக இருக்கிறார். 6 பேர், சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளாக உள்ளனர். 2 பேர், இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் நிரந்தரக் கமிட்டி உறுப்பினர்களாகவும் 6 பேர், அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களாகவும் விளங்குகின்றனர். அரசியல் ரீதியில் அவர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவதோடு, அவர்களுடைய வாழ்க்கையிலும் அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. திங்கள்தோறும் மத பிரமுகர்களுக்கு நிலையான வாழ்க்கை உதவித் தொகை அரசு வழங்குகிறது. அவர்களுடைய அரசியல் தகுநிலை உயர்ந்திருப்பது மத சுதந்திரத்துக்கு அரசு மதிப்பு அளிப்பதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. இதை மத நம்பிக்கையுடைய பல்வேறு தேசிய இன மக்கள் வரவேற்கின்றனர் என்றார் அவர்.
1 2 3 4
|