• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 19:36:02    
தாய் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர்கள்

cri


சீனாவின் மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு முதலிய ஆறுகள் நீண்ட தூரம் பாய்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எண்ணற்ற சீன மக்களை வளர்ப்பதால், அவை தாய் ஆறுகளாக அழைக்கப்படுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஆறுகளுக்கு அருகே கட்டப்பட்ட ஆலைகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அதே வேளை, சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளன. 1999ஆம் ஆண்டில் இருந்து சீனாவில் துவங்கிய தாய் ஆற்றைப் பாதுகாக்கும் செயலினால், கோடிக்கணக்கான இளம் தொண்டர்கள் ஆறு மற்றும் ஏரியின் இயற்கை சூழலுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் இந்தச் செயல், ஐ.நாவின் முதலாவது "புவியின் சாம்பியன்" என்ற பரிசைப் பெற்றுள்ளது.
தாய் ஆற்றைப் பாதுகாக்கும் செயல், சீனக் கம்யூனிஸ் இளைஞர் லீக்கின் மத்திய கமிட்டி, சீனத் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட வாரியங்களுடன் இணைந்து நடத்திய பொது நலச் செயலாகும். மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு ஆகிய ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது அதன் நோக்கமாகும். இந்த நடவடிக்கை பல்வேறு இடங்களில் துவங்கிய பின் பரந்தளவில் ஆதரவைப் பெற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நல்ல பயன் தந்துள்ளது. பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது 

"கடந்த 7 ஆண்டுகளில், தாய் ஆற்றைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபட 35 கோடி இளைஞர்கள் அணி திரட்டப்பட்டுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 38 கோடி யுவான் திரட்டப்பட்டு, சீனாவிலுள்ள பெரிய ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் 2000க்கும் அதிகமான காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 81 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளது. ஆறுகளின் இயற்கைச் சூழல் பயனுள்ள முறையில் மேம்பட்டுள்ளது" என்றார் அவர்.

1 2 3 4