• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 19:36:02    
தாய் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர்கள்

cri
 


"இத்தகைய பிரச்சாரம் மூலம் இயற்கைச் சூழலில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழலைப் பாதுக்காக்குமாறு அனைவருக்கும் அறிவுரை கூற வேண்டும் என விரும்புகின்றேன்" என்றார் அவர்.
சுதந்திர வேலையில் ஈடுபட்ட யே லான், பணக்காரர் அல்ல. ஆனால் அவர் தனது பணத்தை செலவிட்டு, மர விதைகளை வாங்கி, மஞ்சள் ஆற்றின் அருகில் 0.2 ஹெக்டர் பரப்பளவில் மரங்களை நட்டார்.
தாய் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எளிய வேலையிலிருந்து தொடங்கி, தாய் ஆற்றைப் பாதுகாப்பதற்காக இயன்றதனைத்தையும் செய்கின்றனர். சான் துங் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி பூஃ ஜின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தை உருவாக்கினார். அவரின் தலைமையில், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கழிவு மின்கலம் சேர்க்கப்படும் பெட்டிகளை போட்டு, குப்பைக் கூளங்களைத் துப்புரவு செய்து, அருகாமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வு நடத்தி, மரங்களையும் புற்களையும் நட்டு, பொது மக்களிடையில் தொடர்பான பிரச்சாரம் செய்கின்றனர்.
நேயர்கள் இதுவரை, தாய் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர்கள் பற்றிக் கேட்டீர்கள். இத்துடன் சமூக வாழ்வு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


1 2 3 4