• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 19:36:02    
தாய் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர்கள்

cri

 


உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் தேங் கோ மாவட்டம் மஞ்சள் ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு இளம் தொண்டர் குழு ஒன்றும் இருக்கிறது. 30 வயதான கௌ யோங் இக்குழுவின் தலைவர். இயற்கைச் சூழல் கட்டுமானத்தின் பேரெழுச்சியில் பங்கெடுக்க மேலும் அதிகமான பதின்பருவத்தினரை அணி திரட்டுவது, தமது வாழ்வில் முக்கிய கடமையாகும் என்று அவர் கூறினார். அவரின் முன்மொழிவு மற்றும் ஏற்பாட்டில், அங்குள்ள இளைஞர்கள் தாய் ஆற்றின் இயற்கைச் சூழல் பாதுகாப்புக்கான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு நிலையத்தை நிறுவி, மஞ்சள் ஆற்றின் நீர் தரத்தையும் மணல் படிவையும் கண்காணித்து வருகின்றனர். ஒவ்வொரு வசந்தகாலத்திலும் அவர்கள் மரங்களையும் புற்களையும் நட்டு, பாலைவனத்தை பசுமைமயமாக்கும் செயலை செய்கின்றனர். சில இளைஞர்கள் கௌ யோங்கின் தலைமையில் பாலைவன இயற்கை பொருளாதாரத்தை வளர்க்கின்றனர். கௌ யோங் கூறியதாவது 

"நான் அவர்களுடன் உடன்படிக்கை மூலம் பாலைவனத்துக்குப் பொறுப்பேற்கின்றேன். இயற்கைச் சூழலைக் கட்டுப்படுத்தும் அதே வேளை பெரும் பொருளாதாரப் பயனையும் பெறலாம். நடப்பட்ட முக்கியமான வகைகளில், liquorice, medlar உள்ளிட்ட மணலில் வளரக் கூடிய தாவரங்கள் உள்ளன. மணலைக் கட்டுப்படுத்துவது, தாய் ஆற்றைப் பாதுகாக்கும் முக்கிய அம்சமாகும்" என்றார் அவர்.
மஞ்சள் ஆற்றுக்கு நெடுகிலும், பலர் தங்களது திறன் மூலம் வேறுபட்ட முறையில் பாதுகாப்பு நடவடிக்கையில் பங்கெடுக்கின்றனர்.
மஞ்சள் ஆற்றின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஹோநான் மாநிலத்தைச் சேர்ந்த யே லான், நேர்த்தியான கையெழுத்து மற்றும் நிழற்படத் துறையில் தேர்ச்சி பெற்றவர். அவர் அடிக்கடி இவ்விரு முறைகளின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரம் செய்கிறார். தாய் ஆற்றைப் பாதுகாத்து கூட்டாக பசுமை தாயகத்தை உருவாக்குவது என்பது அவர் மிக அதிகமான முறையில் எழுதிய வாக்கியமாகும். அவர் கூறியதாவது

1 2 3 4