• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 19:36:02    
தாய் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர்கள்

cri

 


கடந்த 7 ஆண்டுகளாக, இளம் தொண்டர்கள் பலர் இந்தப் பாதுகாப்பு செயலில் ஈடுபட்டுள்ளனர். 28 வயது தொண்டர் மா சியூ பிங் அவர்களில் ஒருவர். அவரின் ஊர், வட மேற்கு சீனாவன் சிங்காய் மாநிலத்தின் தா தோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக நிலையத்தின் கண்காணிப்பாளராக, தொழில் நிறுவனங்களின் மீது சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான கண்காணிப்பு மற்றும் பரிசோதனையை மேற்கொள்வது அவரின் அன்றாட வேலையாகும்.

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக நிலையத்தின் தலையீட்டினால், 10க்கும் அதிகமான ஆலைகள் மூடப்பட்டன அல்லது வெளியேற்றப்பட்டன. ஆனால் இந்த பயன் பற்றி மா சியூ பிங் மனநிறைவு அடையவில்லை. பதின்பருவத்தினர் இடம்பெறும், பெய் சுவான் ஆற்றைப் பாதுகாக்கும் தொண்டர் குழுவை அவர் உருவாக்கினார். அவர் தாமாகவே நிதித் திரட்டி, மரங்களை நட்டு காட்டை உருவாக்குவது, இயற்கை கோடைக்கால முகாம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நேர்த்தியான கையெழுத்து போட்டி, சொற்பொழிவு போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார்.
மஞ்சள் ஆற்றை மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பது, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளச் செய்ய தாம் விரும்புவதாக மா சியூ பிங் கூறினார். 

"மஞ்சள் ஆற்றைப் பாதுகாப்பது, நமது ஊரை பாதுகாப்பதற்காக மட்டுமே அல்ல. நமது ஒரே புவியைப் பாதுகாப்பதற்காகவும் ஆகும்" என்றார் அவர்.

1 2 3 4