
ஊனமுற்றோருக்கும் இயல்பான மற்ற மனிதர்களைப் போல் உயர் கல்வி பெற வேண்டும் என்பதில் சீன அரசு அக்கறை காட்டுகின்றது. இது ஊனமுற்றோரைப் பராமரிக்கும் பணியில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். தற்போது சீனாவில் ஊனமுற்றோருக்கான நான்கு உயர் கல்வி நிலையங்கள் உள்ளன. சில பல்கலைக்கழகங்களில் ஊனமுற்றோருக்கென சிறப்பு துறைகளும் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அதிகமான ஊனமுற்ற மக்கள் உயர் கல்வி நிலையங்களில் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் சீனாவில் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுவப்பட்ட உயர் கல்வி நிலையாமான சாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்லூரிக்குச் செல்வோம்.
இந்த கல்லூரி சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள ஜிங்லின் மாநிலத்தில் அமைந்துள்ளது. எமது செய்தியாளர் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தவுடன் இனிமையான பியானோ ஒலி கட்டிடத்தில் எதிரொலிக்கின்றது. பியானோஅறையில் பியோனோ இசைத்து பாடுகின்ற பெண் லியு சியென் சன்னை எமது செய்தியாளர் சந்தித்தார்.
1 2 3 4
|