
லியு சியன் சன் கல்விகற்கும் சாசன் சிறப்பு கல்லூரி 1987ம் ஆண்டில் நிறுவப்பட்டது. சீனாவில் முதன் முதலில் ஊனமுற்றோருக்காக திறக்கப்பட்ட உயர் கல்வி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அதன் மூலம் லியு சியன் சன் போன்ற ஊனமுற்றோர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்லூரியில் 500க்கும் அதிகமான ஊனமுற்ற மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
ஊனமுற்றோரின் வேறுபட்ட தனித்தன்மைகளுக்கு இணங்க அவரவர்க்கு ஏற்ற துறைகள் நிறுவப்பட்டன. வாய்பேச முடியாத மாணவர்களுக்கென கை வினைப் பொருள் தயராரிப்பு மற்றும் ஓவியத் துறையும், பார்வையற்ற மாணவர்களுக்கு இசைத் துறையும் சீனாவின் சுதேசி அக்குபஞ்சர் மற்றும் மசாஜ் துறையும் நிறுவப்பட்டன. தவிரவும், அவர்களுக்கென கணக்கெடுப்பு துறையும் கணிணி துறையும் நடத்தப்படுகின்றன.
கல்லூரியின் முதல்வர் சௌ லி ச்சுன் இது பற்றி விளக்கினார். கடந்த பல ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு கல்வி பயிலும் சிறந்த சூழலை வழங்கியுள்ளது. தற்போது கல்லூரியில் திரைப்படம் காட்டும் கருவி, திவிதி கருவி கொண்ட பல்வகை மேம்பட்ட கருவிகளை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஏற்ற பல்வகை சாதனங்கள் கொண்ட பரிசோதனை அறைகளும் நிறுவப்பட்டன. இது பற்றி அவர் கூறியதாவது
1 2 3 4
|